நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்து வீச்சாளர் யார்..? - வார்னர் அளித்த பதில்


நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்து வீச்சாளர் யார்..? - வார்னர் அளித்த பதில்
x

Image Courtesy: AFP

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக டேவிட் வார்னர் நேற்று அறிவித்தார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (வயது 37). இவர் 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 932 ரன்கள் குவித்துள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 695 ரன்கள் குவித்து இருக்கிறார். மேலும், 99 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 894 ரன்கள் அடித்துள்ளார்.

இதனிடையே, ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் நாளை சிட்னி மைதானத்தில் தொடங்க உள்ளது. இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக டேவிட் வார்னர் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அழைப்பு இருந்தால் அதில் விளையாட தயார் என வார்னர் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியா அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வார்னர் ஓய்வு பெறுவதை அடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவரிடம் சில கேள்விகளை எழுப்பியது. அதில் ஒரு கேள்வியாக நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்து வீச்சாளர் யார் என கேட்கப்பட்டது.அந்த கேள்விக்கு பதில் அளித்த வார்னர் கூறியதாவது, சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் அது டேல் ஸ்டெயின் தான் என்றார்.


Next Story