மயங்க் யாதவ் எப்போது களத்திற்கு திரும்புவார்..? - மோர்கல் அளித்த பதில்

image courtesy: twitter/@LucknowIPL
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆட உள்ளன. எனவே இந்த ஆட்டத்தை முன்னிட்டு லக்னோ பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மயங்க் யாதவ் எப்போது களத்திற்கு திரும்புவார் என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து மோர்கல் கூறியதாவது, மயங்க் யாதவ் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ள அணியினருடன் வரவில்லை. அவர் லக்னோவில் பயிற்சி எடுத்து வருகிறார். அவருடன் உதவி பயிற்சியாளர் லேன்ஸ் க்ளூசனர் மற்றும் சில வீரர்கள் உள்ளனர்.
இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்யாமல் கூடுதல் நேரம் கொடுப்பதற்காக அவர் லக்னோவில் தங்கினார். நாங்கள் அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆட உள்ளோம். எனவே அடுத்த ஆட்டத்தில் இருந்து, அவரை மீண்டும் உள்ளே கொண்டு வருவோம் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.