இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்..? - விவரம்


இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்..? - விவரம்
x

Image Courtesy: AFP

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

கயானா,

டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

அதே நாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறும் கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2-வது அரையிறுதி போட்டியில், மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைப்பட்டு ரத்தானால் புள்ளிப் பட்டியலில் (சூப்பர் 8 சுற்று) முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது.


Next Story