ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவே முயற்சிப்போம் - பேட் கம்மின்ஸ்


ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவே முயற்சிப்போம் - பேட் கம்மின்ஸ்
x

Image Courtesy: AFP

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் குரூப் சி-யில் குறிப்பாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் தங்களது கடைசி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

அதோடு ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்த வேண்டும் இந்த இரண்டும் நடந்தால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். ஆனால் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பேசிய ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஜோஷ் ஹேசல்வுட் கூறுகையில்,

இங்கிலாந்து அணி வெளியேற வேண்டும் என்பதையே ஆஸ்திரேலிய அணி விரும்பும். எனவே ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி மெதுவாக விளையாட விரும்பும். மற்ற அணிகளும் அதையே தான் விரும்புவார்கள் என்று ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கருத்து குறித்து பேசியிருந்த மற்றொரு ஆஸ்திரேலிய முன்னணி வீரரான பேட் கம்மின்ஸ் கூறியதாவது, அவரது இந்த கருத்து குறித்து நான் அவரிடமே பேசினேன். ஆனால் அவர் நகைச்சுவையாகவே அந்த கருத்தை கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த விசயம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

நாங்கள் எப்போதுமே எந்த அணிக்கு எதிராகவும் விருப்பமின்றி விளையாட மாட்டோம். ஸ்காட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் எங்களுடைய முழு முயற்சியையும் வெளிப்படுத்தி வெற்றி பெறவே முயற்சிப்போமே தவிர அந்த போட்டியை எளிதாக நினைத்து விளையாட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story