போட்டியின் முதல் நாளில் இருந்தே நல்ல நிலையில் இருந்தோம் - ஸ்டீவ் ஸ்மித்


போட்டியின்  முதல் நாளில் இருந்தே நல்ல நிலையில் இருந்தோம்  - ஸ்டீவ் ஸ்மித்
x

Image Courtesy : ICC 

இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் சுமித் (121 ரன்கள்), டிராவிஸ் ஹெட் (163 ரன்கள்) சதம் அடித்தனர்

இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஹானே 89 ரன்கள், ஷர்துல் தாக்குர் 51 ரன்கள் அரைசதம் அடித்தனர்.


இதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின. கோலி 49 ரன்களுடனும், ஜடேஜா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷர்துல் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். உமேஷ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய பரத் 23 ரன்னில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் வெற்றிக்கு பின் பேசிய ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது ,

எங்கள் அணிக்கு இது ஒரு பெரிய சாதனை, நாங்கள் இங்கு வருவதற்கு கடந்த 2 ஆண்டுகளில் சில நல்ல கிரிக்கெட் விளையாடினோம், இந்தியாவும் விளையாடியது. முதல் நாளில் நாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்தோம், டிராவிஸ் ஹெட் நன்றாக விளையாடினார்,

விராட் கோலியின் அந்த கேட்ச் எங்களுக்கு முக்கியமானது. விராட் மற்றும் ஜடேஜா விக்கெட் முக்கியமானது நாங்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள், இறுதியில் வெற்றியைப் பெற்றோம். பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துவீச்சு முயற்சியால் மகிழ்ச்சி,என தெரிவித்தார் "


Next Story