சிக்கந்தர் ராசா அணியை வழிநடத்துவது எங்களது அதிர்ஷ்டம் - ஜிம்பாப்பே பயிற்சியாளர்


சிக்கந்தர் ராசா அணியை வழிநடத்துவது எங்களது அதிர்ஷ்டம் - ஜிம்பாப்பே பயிற்சியாளர்
x

Image Courtesy: @ICC 

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி சிக்கந்தர் ராசா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சீனியர் வீரர்களான க்ரேக் எர்வின், வில்லியம்ஸ், ரியான் பர்ல் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்நிலையில், ஜிம்பாப்வே அணியை சிக்கந்தர் ராசா அணியை வழிநடத்துவது எங்களது அதிர்ஷ்டம் என ஜிம்பாப்வெ தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிக்கந்தர் ராசா போன்ற வீரர் அணியை வழிநடத்துவது எங்களது அதிர்ஷ்டம் என நினைக்கிறேன்.

அவருக்கு டி20 போட்டிகளில் அதிக அளவு அனுபவம் இருக்கிறது. அவர் அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும் என விரும்புகிறோம். ஓய்வறையில் வீரர்களுடன் பேசுவது அவர்களை எப்படி கையாளவது என எல்லாம் சரியாக செய்கிறார். தொடரில் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story