இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்ய ஆர்வமுடன் உள்ளோம் - ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி


இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்ய ஆர்வமுடன் உள்ளோம் - ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி
x

image courtesy: AFP

இந்தியா- பாகிஸ்தான் இரு நாட்டு கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது.

மெல்போர்ன்,

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவில்லை. உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டும் மோதுகின்றன. பாகிஸ்தானில் இந்திய அணி விளையாடுவதற்கு மத்திய அரசு அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இரு நாட்டு கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே கூறுகையில், '2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மெல்போர்னில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் எத்தகைய வரவேற்பை பெற்றது என்பதை அறிவோம். மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்தது. அவர்கள் இடையிலான போட்டியை மறுபடியும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு ஏற்பாடு ெசய்ய ஆர்வமுடன் உள்ளோம். தேவைப்பட்டால் அதற்கான முயற்சியை எடுக்க தயார்' என்றார்.


Next Story