ஆசியக்கோப்பை போட்டியில் விராட் கோலி பார்முக்கு திரும்புவார் : கங்குலி நம்பிக்கை


ஆசியக்கோப்பை போட்டியில் விராட் கோலி பார்முக்கு திரும்புவார் : கங்குலி நம்பிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2022 10:37 AM IST (Updated: 16 Aug 2022 10:56 AM IST)
t-max-icont-min-icon

ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி வருகிற 28 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

புதுடெல்லி,

2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரரகள் விமர்சித்து வருகிறார்கள். அவரது பார்ம் ஆசிய கோப்பை ,உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விராட் கோலி குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது ;

அவர் பயிற்சி செய்யட்டும், போட்டிகளில் விளையாடட்டும். அவர் ஒரு பெரிய வீரர் மற்றும் நிறைய ரன்கள் எடுத்துள்ளார். அவர் மீண்டும் பார்முக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரால் சதம் அடிக்க முடியவில்லை, ஆசிய கோப்பையில் அவர் தனது பார்மை கண்டுபிடிப்பார் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி வருகிற 28 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

1 More update

Next Story