சுரேஷ் ரெய்னாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த விராட் கோலி


சுரேஷ் ரெய்னாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த விராட் கோலி
x

image courtesy: twitter/@RCBTweets

ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 2 கேட்சுகள் பிடித்தார்.

பெங்களூரு,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி பெங்களூரு பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டிங் செய்கையில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் ஆகிய 2 வீரர்கள் கொடுத்த கேட்சை கச்சிதமாக பிடித்த விராட் கோலி பீல்டிங்கில் அசத்தினார். இந்த 2 கேட்ச்சுகளையும் சேர்த்து சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் இதுவரை விராட் கோலி 173 கேட்ச்சுகளை பிடித்துள்ளார்.

குறிப்பாக இந்தியாவுக்காக 52 கேட்ச்சுகளை பிடித்துள்ள அவர் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக 117 கேட்ச்சுகளையும் மாநில அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் 4 கேட்ச்சுகளையும் பிடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகளை பிடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் வாழ்நாள் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்தப் பட்டியல்:

1. விராட் கோலி : 173

2. சுரேஷ் ரெய்னா : 172

3. ரோகித் சர்மா : 167

4. மனிஷ் பாண்டே : 146

5. சூர்யகுமார் யாதவ் : 136


Next Story