டி.என்.பி.எல். தொடர்: டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று தொடக்கம்


டி.என்.பி.எல். தொடர்:   டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று தொடக்கம்
x

டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் (நத்தம்) ,சென்னை ஆகிய நகரங்களில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்திலும் (ஜூலை 5-11), கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரி மைதானத்திலும் (ஜூலை 13-18) அரங்கேறுகிறது. சேலத்தில் 9 ஆட்டங்களும், கோவையில் 8 ஆட்டங்களும் நடைபெறுகிறது.

இந்த முதல் 17 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. paytm Insider என்ற இணைய தளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும் போட்டி நடைபெறும் இடங்களில் டிக்கெட் விற்பனை நடைபெறாது என்றும், 2-வது கட்ட லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story