டி.என்.பி.எல்.: சேப்பாக் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்.: சேப்பாக் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சு தேர்வு
x

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடுகின்றன.

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) டி20கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டதிற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story