டி.என்.பி.எல்: திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்: திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @TNPremierLeague

டி.என்.பி.எல், தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மதுரை - திருச்சி அணிகள் மோத உள்ளன.

சேலம்,

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள 7வது லீக் ஆட்டத்தில் மதுரை - திருச்சி அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story