டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: திண்டுக்கல் வெற்றி பெற 130 ரன்களை இலக்காக நிர்ணயித்த கோவை கிங்ஸ்


டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: திண்டுக்கல் வெற்றி பெற 130 ரன்களை இலக்காக நிர்ணயித்த கோவை கிங்ஸ்
x

கோவை கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ராம் அரவிந்த் 27 ரன்கள் அடித்தார்.

சென்னை,

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியில் ஓரளவுக்கு சமாளித்த தொடக்க ஆட்டக்காரர் ஆன சுஜய் 22 ரன்களும், ராம் அரவிந்த் 27 ரன்களும், ஆதீக் உர் ரஹ்மான் 25 ரன்களும் அடித்ததால் அந்த அணி கவுரமான நிலையை எட்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த லைகா கோவை கிங்ஸ் 129 ரன்கள் அடித்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.


Next Story