டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு


டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு
x

image courtesy: TNPL twitter

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

நெல்லை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் இடையிலான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கியது. கோவை, சேலம், நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய இடங்களில் நடந்த லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றை எட்டின.

4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி அணிகள் முறையே 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


Next Story