டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திண்டுக்கல் அபார பந்துவீச்சு... திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட்


டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திண்டுக்கல் அபார பந்துவீச்சு... திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட்
x

image courtesy: twitter/@TNPremierLeague

டி.என்.பி.எல். தொடரின் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் விளையாடி வருகின்றன.

சென்னை,

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர்.

அந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மான் பப்னா, கனேஷ் மற்றும் அமித் சாத்விக் சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணி 100 ரன்களை கடக்க உதவினர்.

19.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மான் பாப்னா 26 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், சுபோத் பாட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்க உள்ளது.


Next Story