இந்திய கிரிக்கெட் அணியிடம் இருந்து நான் கற்ற பாடம் இதுதான் - ஆக்கி வீரர் பேட்டி


இந்திய கிரிக்கெட் அணியிடம் இருந்து நான் கற்ற பாடம் இதுதான் - ஆக்கி வீரர் பேட்டி
x

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது.

பெங்களூரு,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் நேற்று அளித்த பேட்டியில், `சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை நான் பார்த்தேன். கடைசி பந்து வரை கொண்டாட வேண்டாம் என்பது இந்த போட்டியில் இருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடமாகும். 15-வது ஓவர் வரை தென் ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனாலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை.

தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றியை தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து பறித்தது. நாங்கள் (ஆக்கி அணி) மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும் இந்திய கிரிக்கெட் அணியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்பிக்கையை ஒருபோதும் இழந்து விடாமல் கடைசி தருணம் வரை போராடினால் நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்பதாகும். இதனை ஒலிம்பிக் போட்டியில் நினைவில் வைத்து செயல்படுவேன்' என்றார்.


Next Story