இலங்கைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - நியூசிலாந்து கேப்டன் கவலை


இலங்கைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - நியூசிலாந்து கேப்டன் கவலை
x

image courtesy: AFP

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் ஆகியது.

காலே,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி இலங்கை மண்ணில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

இதில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை கொண்ட இலங்கையில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி தெரிவித்துள்ளார். முதல் டெஸ்டில் கொஞ்சம் போராடிய தாங்கள் 2வது போட்டியில் போராடாமலேயே தோற்றதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர் இதை விட சவாலாக இருக்கும் என்பதால் எப்படி வெல்லப் போகிறோம் என்று சவுதி கவலை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தொடர் முடிவில் பேசியது பின்வருமாறு:- "இந்த தோல்வி மிகவும் கடினம். தோல்வியை சந்தித்த அணியின் பக்கம் இருப்பது மிகமிக கடினம். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் கடினமான இடம். முதல் போட்டியில் நாங்கள் கடினமாக போராடி வெற்றிக்கான தருணங்களை கண்டோம். ஆனால் இந்தப் போட்டி அதை விட கடினமாக இருந்தது. இப்போது நாட்டுக்கு திரும்பி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதன் பின் இந்தியாவுக்கு செல்ல வேண்டும். இலங்கை போலவே இந்தியாவும் இந்த உலகின் ஒரே மாதிரியான பகுதியாகும்" என்று கூறினார்.


Next Story