இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்கு காரணம் இதுதான் - பாபர் அசாம்


இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்கு காரணம் இதுதான் - பாபர் அசாம்
x

Image Courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது.

பர்மிங்காம்,

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 184 ரன் என்ற இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நேற்றையை ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அளித்த பேட்டியில் கூறியதாவது, அது சராசரியான இலக்குதான். எங்களுடைய பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். பேட்டிங்கில் சில வேகத்தை கொண்டிருந்தோம். ஆனால் நன்றாக பினிஷிங் செய்யவில்லை. நானும், பக்காரும் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால் அதன் பின் பெரிய பார்ட்னர்ஷிப் அமையவில்லை. அதுவே தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.

ஒருவேளை அவர்களில் யாராவது 40 முதல் 50 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி வித்தியாசமாக இருந்திருக்கும். எங்கள் வீரர்களில் ஒவ்வொருவருக்கான வேலையையும் ஏற்கனவே முடிவு செய்து விட்டோம். அதனால் பார்மில் இல்லை என்றால் கூட எங்களிடம் வளைவுத்தன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பக்கார் ஜமான் அதிரடியாக விளையாடினார். ஒருவேளை நானும், அவரும் இன்னும் 3 ஓவர்கள் விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும்.

இமாத் வாசிம் அனுபவத்தை கொண்டவர். சூழ்நிலைகளையும், எதிரணி பேட்ஸ்மேன்களையும் எப்படி படிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் பேட்டிங்கில் முன்னேறியுள்ளது எங்களுக்கு நல்லது. ஷதாப் கான் அனைத்து துறைகளிலும் அசத்தக்கூடியவர். அவர் எங்களுடைய உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளது தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story