இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; முதல் 2 போட்டிகளை தவறவிடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் - வெளியான தகவல்..?

Image Courtesy: @BCCI
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பெறமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட முகமது ஷமி கனுக்கால் காயம் காரணமாக அதன் பின்னர் எந்த வித கிரிக்கெட்டிலும் ஆடாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






