வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்


வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்
x

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

மும்பை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

அதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானை தோற்கடித்துள்ள வங்காளதேசத்திடம் இந்தியா கவனத்துடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"பாகிஸ்தானில் நடைபெற்ற 2 போட்டிகளில் வென்றதன் வாயிலாக வங்காளதேசம் தங்களை பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தங்களுடைய சொந்த மண்ணில் வங்காளதேச வீரர்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய போராட்டத்தை வழங்கினர். தற்போது பாகிஸ்தான் தொடரை வென்றதால் அவர்கள் இந்தியாவை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். அவர்கள் அணியில் சில சிறந்த மற்றும் புதிய நம்பிக்கைக்குரிய வீரர்கள் உள்ளனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய ஆரம்பகால முயற்சிகளை வகைப்படுத்துவது பிரமிப்பு இல்லை.

எனவே பாகிஸ்தானை வீழ்த்தியதுபோல் அவர்கள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கலாம். அதனால் இது ஒரு நல்ல தொடராக இருக்கும். இந்தியா அடுத்த நான்கரை மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதற்கு அந்த 10 போட்டிகளில் இந்தியா குறைந்தது 5 வெற்றிகளை பெறுவது அவசியம். ஆனால் அந்த 5 போட்டிகளும் இந்தியாவுக்கு எளிதாக இருக்காது. எனவே இந்த கோடை காலம் நமக்கு சுவாரசியம் மிகுந்த கிரிக்கெட்டை கொடுக்கும்" என்று கூறினார்.


Next Story