டெஸ்ட் கிரிக்கெட்: சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜெய்ஸ்வால்
வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ஜெய்ஸ்வால் இந்த சாதனையை படைத்துள்ளார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்களும், வங்காளதேசம் 149 ரன்களும் அடித்தன.
இதனையடுத்து 237 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 43 ரன்களுக்குள் ரோகித் சர்மா (5 ரன்) மற்றும் ஜெய்ஸ்வால் (10 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரு இன்னிங்ஸ்களில் முறையே 56 மற்றும் 10 ரன்கள் அடித்தார். இதன் மூலம் அறிமுகம் ஆன முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 978 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ஜெய்ஸ்வால் 1094 ரன்களுடன் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் சர்வதேச அளவில் 4-வது இடத்தையும் பிடித்து ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளார்.
அந்த பட்டியல்:-
1. டான் பிராட்மேன் - 1446 ரன்கள்
2.எவர்டன் வீக்ஸ் - 1125 ரன்கள்
3.ஜார்ஜ் ஹெட்லி - 1102 ரன்கள்
4.ஜெய்ஸ்வால் - 1094 ரன்கள்
5.மார்க் டெய்லர் - 1088 ரன்கள்.