லைவ் அப்டேட் டெஸ்ட் : 2வது நாள் முடிவில் இந்திய அணி 151/5


லைவ் அப்டேட்  டெஸ்ட் : 2வது நாள் முடிவில் இந்திய அணி 151/5
x
தினத்தந்தி 8 Jun 2023 3:17 PM IST (Updated: 8 Jun 2023 10:43 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.




Live Updates

  • 8 Jun 2023 6:59 PM IST

     டெஸ்ட் கிரிக்கெட்டில் சிராஜ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார்  

  • முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழப்பு
    8 Jun 2023 6:52 PM IST

    முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழப்பு

    இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும். பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அடுத்து இறங்கிய மிட்செல் ஸ்டார்க் 5 ரன் எடுத்திருந்தபோது அக்சர் படேலின் துல்லிய பீல்டிங்கில் ரன் அவுட்டானார். 8-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியுடன் பாட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


  • 8 Jun 2023 6:50 PM IST

    முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது 

  • 8 Jun 2023 6:34 PM IST

    சிராஜ் பந்துவீச்சில் நாதன் லியோன் 9 ரன்களில் வெளியேறினார் . ஆஸ்திரேலிய அணி தற்போது 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது 

  • 450 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி
    8 Jun 2023 6:14 PM IST

    450 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி

    ஆஸ்திரேலிய அணி தற்போது 8 விக்கெட் இழந்து 450 ரன்களை கடந்துள்ளது சிறப்பாக ஆடிய அலெக்ஸ் கேரி 48 ரன்களில் இந்திய வீரர் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.



  • 8 Jun 2023 5:58 PM IST

    கடைசி 3 விக்கெட்டுகளை வீழ்த்த போராடும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் போராடி வருகின்றனர் 

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி:  உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 422/7
    8 Jun 2023 5:09 PM IST

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 422/7

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.  முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 2-வது நாளான இன்று உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்கள் குவித்துள்ளது.

  • 8 Jun 2023 5:07 PM IST

    உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் குவித்துள்ளது 

  • 8 Jun 2023 4:49 PM IST

    சிராஜ் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் 5 ரன்னில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.


  • 8 Jun 2023 4:39 PM IST


Next Story