லைவ் அப்டேட் டெஸ்ட் : 2வது நாள் முடிவில் இந்திய அணி 151/5
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
Live Updates
- 8 Jun 2023 8:05 PM IST
தேநீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டுக்கு 37 ரன்களை எடுத்துள்ளது. புஜார் 3 ரன்னும், விராட் கோலி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- 8 Jun 2023 7:53 PM IST
Tea time ☕
— ICC (@ICC) June 8, 2023
Australia have sent the Indian openers back to the pavilion and are dominating proceedings 🔥
Follow the #WTC23 Final 👉 https://t.co/wJHUyVouPZ pic.twitter.com/tRHTObCzNN - 8 Jun 2023 7:44 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: ரோகித் சர்மா, கில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மான் கில் முறையே 15 மற்றும் 13 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: ரோகித் சர்மா, கில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம்
- 8 Jun 2023 7:10 PM IST
இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , கில் களம் இறங்கினர்.
- 8 Jun 2023 7:10 PM IST
இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , கில் களம் இறங்கினர்.