டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ரோகித், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய ஹாரி புரூக்
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தை நெருங்கியுள்ளார்.
துபாய்,
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் 241 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரின் சதம் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த போட்டி முடிவடைந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோ ரூட் 12 புள்ளிகள் கூடுதலாக முதலிடத்தில் உள்ள வில்லியம்சனை நெருங்கியுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அசத்தும் பட்சத்தில் அவர் முதலிடத்தை பிடிப்பார்.
அதேபோல் மற்றொரு இங்கிலாந்து வீரரான ஹாரி புரூக், சதம் அடித்ததன் மூலம் தரவரிசையில் ரோகித், பாபர் அசாம், ஸ்டீவ் சுமித் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை.