தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் அடித்து அசத்தல்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் அடித்து அசத்தல்
x

image courtesy; AFP

தினத்தந்தி 5 Feb 2024 8:16 AM IST (Updated: 5 Feb 2024 8:18 AM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

மவுண்ட் மவுன்கானுய்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம், டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் லதாம் 20 ரன், கான்வே 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ரவீந்திரா, வில்லியம்சன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் நிதானமாக ஆடி சதம் அடித்து அசத்தினர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 86 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 258 ரன்கள் அடித்திருந்தது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் 118 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேரில் மிட்செல் 34 ரன்களிலும், டாம் பிளண்டெல் 11 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் அடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 240 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது வரை நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 475 ரன்கள் குவித்துள்ளது. கைல் ஜேமிசன் 1 ரன்னிலும், மிட்செல் சான்ட்னர் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.



Next Story