ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
x

image courtesy: ICC

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 அணி: பட்லர் (கேப்டன்), ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன்,சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

ஒருநாள் அணி: பட்லர் (கேப்டன்), ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜாமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.


Next Story