டி20 உலகக்கோப்பை; இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில் மோதும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்


டி20 உலகக்கோப்பை; இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில் மோதும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்
x

கோப்புப்படம் 

கயானாவில் இந்தியாவை இங்கிலாந்து அணி தோற்கடிக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன் கூறியுள்ளார்.

லண்டன்,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதி ஆட்டத்திலும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி ஆட்டத்திலும் மோத உள்ளன.

இந்திய நேரப்படி முதலாவது அரையிறுதி ஆட்டம் நாளை காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியா வெற்றிக்கு போதுமானதாக இல்லை. கயானாவில் இந்தியாவை இங்கிலாந்து அணி தோற்கடிக்கும் என்று நினைக்கிறேன். ஆப்கானிஸ்தானுக்கு சவாலான அணியாக தென் ஆப்பிரிக்கா செயல்படும். எனவே தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story