டி20 உலகக்கோப்பை; இந்த 4 அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சுனில் கவாஸ்கர்


டி20 உலகக்கோப்பை; இந்த 4 அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சுனில் கவாஸ்கர்
x

image courtesy; AFP

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்பது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

என்னைப்பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னாள் சாம்பியன்களான இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகள் தான் முன்னேறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
  • chat