டி20 உலககோப்பை தொடர் : ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு


டி20  உலககோப்பை தொடர் : ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2022 3:26 PM IST (Updated: 17 Sept 2022 7:44 PM IST)
t-max-icont-min-icon

உலக கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்

இந்த நிலையில் இந்த உலககோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி :

முகமது நபி (கேப்டன் ), நஜிபுல்லாஹ் சத்ரான் (கேப்டன் ), ரஹ்மானுல்லா குர்பாஸ் , அஸ்மத்துல்லா உமர்சாய், தர்வீஷ் ரசூலி, பரித் அஹ்மத் மாலிக், பசல் ஹக் பரூக்கி, ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், இப்ராஹிம் சத்ரான், முஜீப் உர் ரஹ்மான், ரஹ்மத், குயீன் ரஹ்மான்,ரஷீத் கான், சலீம் சபி, உஸ்மான் கனி.

காத்திருப்பு வீரர்கள் : அப்சர் ஜசாய், ஷராபுதீன் அஷ்ரப், ரஹ்மத் ஷா, குல்பாடின் நைப்.


Next Story