டி20 கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு


டி20 கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு
x

Image Courtesy : @BCCI twitter

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியா கடுமையாக போராடும், அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்தப்போட்டியில் வெற்றி பெற வங்காளதேசம் முயற்சிக்கும்.

அதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story