தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் டிரா: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?


தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் டிரா: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?
x

image courtesy: ICC

தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்த போட்டி சமனில் முடிவடைந்தது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் அணிகள் மாற்றமின்றி அதே வரிசையில் தொடருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் கூடுதலாக புள்ளிகள் பெற்ற நிலையில் அதே இடத்தில் நீடிக்கின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்:-

1. இந்தியா - 68.52 சதவீதம்

2. ஆஸ்திரேலியா - 62.50 சதவீதம்

3. நியூசிலாந்து - 50.00 சதவீதம்

4. இலங்கை - 50.00 சதவீதம்

5. பாகிஸ்தான் - 36.66 சதவீதம்

6. இங்கிலாந்து - 36.54 சதவீதம்

7. தென் ஆப்பிரிக்கா - 26.57 சதவீதம்

8. வங்காளதேசம் - 25.00 சதவீதம்

9. வெஸ்ட் இண்டீஸ் - 20.83 சதவீதம்


Next Story