தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. ஆப்கானிஸ்தான் 169 ரன்களில் ஆல் அவுட்


தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. ஆப்கானிஸ்தான் 169 ரன்களில் ஆல் அவுட்
x

image courtesy: twitter/@ICC

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

சார்ஜா,

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. இதன் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆன குர்பாஸ் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வெறும் 34 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 169 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 89 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் நிகிடி, நக்பா பீட்டர் மற்றும் பெஹ்லக்கோயா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.


Next Story