டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த சிக்கந்தர் ராசா
இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ராசா 46 ரன்கள் அடித்தார்.
ஹராரே,
ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான 4-வது டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 19 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 50+ விக்கெட்டுகள் மற்றும் 2000 ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ஷகிப் அல் ஹசன் - 2551 ரன்கள் + 149 விக்கெட்டுகள்
2. முகமது நபி - 2165 ரன்கள் + 96 விக்கெட்டுகள்
3. விரந்தீப் சிங் - 2320 ரன்கள் + 66 விக்கெட்டுகள்
4. முகமது ஹபீஸ் - 2514 ரன்கள்+ 61 விக்கெட்டுகள்
5. சிக்கந்தர் ராசா - 2028 ரன்கள் + 65 விக்கெட்டுகள்