ஐ.பி.எல் தொடரில் களம் இறங்கும் ஷமர் ஜோசப் - எந்த அணிக்காக தெரியுமா..?


ஐ.பி.எல் தொடரில் களம் இறங்கும் ஷமர் ஜோசப் - எந்த அணிக்காக தெரியுமா..?
x

image courtesy; AFP

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் வரும் ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜீன் மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு சிறப்பாக தயாராக இந்த தொடர் ஒரு முன்னோட்டமாக இருக்கும்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் வரும் ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் மார்க் வுட்-க்கு பதிலாக ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு ஷமர் ஜோசப் மிக முக்கிய பங்காற்றினார். அவர் அப்போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சிறப்பான செயல்பாட்டை அடுத்து பல முன்னணி வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் அவர் ஐ.பி.எல் தொடரில் களம் இறங்க உள்ளார். ஷமர் ஜோசப்பிற்கு இது முதல் ஐ.பி.எல் சீசன் ஆகும்.


1 More update

Next Story