இந்தியாவுக்கு எதிரான தொடர்; தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் - ஷாண்டோ


இந்தியாவுக்கு எதிரான தொடர்; தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் - ஷாண்டோ
x

Image Courtesy: AFP

மெஹதி ஹசன் மிராஸ் இரண்டு இன்னிங்சிலும் அருமையாக பந்துவீசினார் என நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கூறினார்.

கான்பூர்.

இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அளித்த பேட்டியில் கூறியதாவது,

எங்கள் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது எதுவென்றால் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை.எங்களுடைய பேட்ஸ்மேன் எல்லோருமே 30, 40 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் களமிறங்கும்போது, பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்பது முக்கியம்.

இந்திய அணியில் பார்த்தால் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். அந்த போட்டியில் பெரிய வித்தியாசமாக அவர்களுடைய பேட்டிங் அமைந்தது. அப்படியான தருணங்களில் நாம் விக்கெட் வீழ்த்த வேண்டும். நாங்கள் அந்த வகையிலும் சிறப்பாக செயல்படவில்லை. மொமினுல் ஹக் பேட்டிங் செய்த விதம் அவர் முன்னேறுவதற்கு உதவும். மெஹதி ஹசன் மிராஸ் இரண்டு இன்னிங்சிலும் அருமையாக பந்துவீசினார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story