சாதனை பட்டியலில் எம்.எஸ். தோனியை முந்திய ரோகித் சர்மா


சாதனை பட்டியலில் எம்.எஸ். தோனியை  முந்திய ரோகித் சர்மா
x

image courtesy; AFP

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்து அசத்தினார்.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது .

இதில் இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கை கோர்த்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி அணியை தலை நிமிர செய்தது.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 131 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் இந்த ஆட்டத்தில் அடித்த 3 சிக்சர்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அவர் இதுவரை 212 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் எம்.எஸ். தோனியை முந்தியுள்ளார்.

அந்த பட்டியல்;

1. இயான் மோர்கன் - 233 சிக்சர்கள்

2. ரோகித் சர்மா - 212 சிக்சர்கள்

3. எம்.எஸ்.தோனி - 211 சிக்சர்கள்

4. ரிக்கி பாண்டிங் -171 சிக்சர்கள்

5. பிரண்டன் மெக்கல்லம் - 170 சிக்சர்கள்


Next Story