கேப்டனாக ரோகித் சர்மா அதிக ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும் - கபில்தேவ்


கேப்டனாக ரோகித் சர்மா அதிக ஆக்ரோஷத்துடன் செயல்பட  வேண்டும்  -  கபில்தேவ்
x
தினத்தந்தி 16 Aug 2023 3:17 PM IST (Updated: 16 Aug 2023 3:23 PM IST)
t-max-icont-min-icon

கேப்டனாக ரோகித் சர்மா அதிக ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஆசியக் கோப்பைக்கு தயாராகி வருகிறார் . ஆசிய கோப்பை போட்டியில் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா, போட்டிகளில் அதிக ஆக்ரோஷத்துடன் செயல்படவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் சமீப காலங்களில் நான் பார்த்த மிகச்சிறந்த தொடர்களில் ஒன்றாகும். கிரிக்கெட் என்றால் அப்படி விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ரோகித் சிறந்தவர்தான். ஆனால் அவர் அதிக ஆக்ரோஷத்துடன் செயல்படவேண்டும்.

இங்கிலாந்து போன்ற அணிகள் இப்போது எப்படி விளையாடுகின்றன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அது நாங்கள் மட்டுமல்ல. கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் இந்த வழியில் சிந்திக்க வேண்டும். விளையாட்டில் வெற்றி பெறுவது அனைத்து அணிகளுக்கும் அதிக முன்னுரிமையாக இருக்க வேண்டும் (டிராவுக்காக விளையாடக்கூடாது) என தெரிவித்துள்ளார்.


Next Story