தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது உணர்ச்சிவசப்பட்ட ரோகித் சர்மா... வைரல் வீடியோ..!


தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது உணர்ச்சிவசப்பட்ட ரோகித் சர்மா... வைரல் வீடியோ..!
x
தினத்தந்தி 23 Oct 2022 7:01 PM IST (Updated: 23 Oct 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக கேப்டனாக களம் கண்ட ரோகித் சர்மா, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டார்.

மெல்போர்ன்,

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி இன்று பாகிஸ்தானை மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய அணியின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது கேப்டன் ரோகித் சர்மா மிகவும் உணர்ச்சிமயமாக காணப்பட்டார்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக கேப்டனாக களம் கண்ட ரோகித் சர்மா, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

1 More update

Next Story