ஜானி பேர்ஸ்டோவ் ரன் அவுட் புகைப்படத்துடன் ஆஸி. பிரதமர் - சாண்ட் பேப்பரை நினைவு படுத்திய இங்கிலாந்து பிரதமர்
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
வில்னியஸ்,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஜானி பேர்ஸ்டோவ் ரன் அவுட் முக்கிய காரணமாக உள்ளது. இந்த ரன் அவுட் விளையாட்டை கடந்து அரசியலிலும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், லிதுவேனியா நாட்டில் நேட்டோ அமைப்பின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகள் பங்கேற்றுள்ளன.
இதில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் சந்தித்தனர். அப்போது, ஆஷஸ் டெஸ்ட்டில் 2-1 என்ற கணக்கில் நாங்கள் முன்னிலையில் உள்ளோம் என ஆஸ்திரேலிய பிரதமர் கூறினார். இதற்கான புகைப்படத்தையும் காட்டினார்.
இதை பார்த்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிரித்துக்கொண்டே 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றிபெறதன் புகைப்படத்தை காட்டினார்.
உடனடியாக இந்த புகைப்படம் உங்களை மிகவும் ஆத்திரமூட்டலாம் என கூறி இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ்வின் சர்ச்சைக்குரிய ரன் அவுட் புகைப்படத்தை ஆஸி. பிரதமர் காட்டினார். இதை கண்டு சிரிந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், என்னை மன்னித்துவிடுங்கள் நான் சாண்ட் பேப்பரை எடுத்துவரவில்லை என கூறினார். இதனால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.