ரிக்கல்டன் - ஸ்டப்ஸ் அரைசதம்: தென் ஆப்பிரிக்கா 271 ரன்கள் சேர்ப்பு
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரியான் ரிக்கல்டன் 91 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 79 ரன் எடுத்தனர்.
அபுதாபி,
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் டோனி டி ஜோர்ஜி களம் இறங்கினர். இதில் டோனி டி ஜோர்ஜி 12 ரன்னிலும், அடுத்து வந்த பவுமா 4 ரன்னிலும், வான் டென் டுசென் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ரிக்கல்டனுடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரியான் ரிக்கல்டன் 91 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 79 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வியான் முல்டர் 11 ரன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 1 ரன், லிசாட் வில்லியம்ஸ் 13 ரன், ஜோர்ன் பார்டுயின் 28 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரியான் ரிக்கல்டன் 91 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 79 ரன் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் மார்க் அடெய்ர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து ஆட உள்ளது.