ஆர்.சி.பி. அணிக்கு எதிராக 16-வது ஆண்டாக சாதனையை தக்கவைத்துக்கொண்ட சி.எஸ்.கே
பெங்களூரு அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு வெற்றி பெற்றது.
சென்னை,
17-வது ஐ.பி.எல். சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் 16 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் கவுரவ சாதனையையும் சென்னை தக்க வைத்துக்கொண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை முதலும் கடைசியுமாக 2008-ல் ராகுல் டிராவிட் தலைமையிலான பெங்களூருவிடம் சேப்பாக்கத்தில் தோனி தலைமையிலான சென்னை தோற்றது.
ஆனால் அதன் பின் விளையாடிய 8 போட்டிகளிலும் பெங்களூருவை தோற்கடித்துள்ள சென்னை அந்த சாதனையை தற்போது வரை தக்கவைத்து கொண்டுள்ளது.
Related Tags :
Next Story