ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பியூஷ் சாவ்லா


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பியூஷ் சாவ்லா
x

அதிக சிக்சர்கள் வழங்கியவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து பியூஷ் சாவ்லா மோசமான சாதனை படைத்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். போட்டிகளில் அதிக சிக்சர்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா நிகழ்த்தி உள்ளார். நேற்றையப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய சாவ்லா, 43 ரன்களை வாரி வழங்கினார்.

சாவ்லாவின் ஓவரில் ஐதராபாத் வீரர் கிளாசென் சிக்சர்களைப் பறக்கவிட்டார். இதுவரை 170 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ள சாவ்லா, 185 சிக்சர்களை வழங்கி உள்ளார். அதிக சிக்சர்கள் வழங்கியவர்கள் பட்டியலில் சாஹலை பின்னுக்குத் தள்ளி பியூஷ் சாவ்லா மோசமான சாதனை படைத்துள்ளார்.




Next Story