ஒருநாள் கிரிக்கெட்: பிறந்தநாளில் வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்
ரஷித் கானுக்கு நேற்றைய தினம் பிறந்தநாள் ஆகும்.
சார்ஜா,
ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 105 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா வெறும் 134 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முன்னதாக ரஷித் கானுக்கு நேற்றைய தினம் பிறந்தநாள் ஆகும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் அதிகபட்ச விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ரஷித் கான் - 5 விக்கெட்டுகள்
2. பிலாண்டர்/பிராட் - 4 விக்கெட்டுகள்.