இந்தியா அல்ல...2024 டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - யுவராஜ் சிங் கணிப்பு

Image Courtesy: @cheteshwar1
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
மும்பை,
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது,
இம்முறை எனக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது. குறிப்பாக இம்முறை (2024 டி20 உலகக்கோப்பை) தென் ஆப்பிரிக்கா வெல்லும் என்று நான் கருதுகிறேன். அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஐசிசி தொடரை வென்றதில்லை.
இருப்பினும் கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அவர்கள் வெற்றியை நோக்கி சிறப்பாக வந்தனர். அதேபோல பாகிஸ்தான் அணியும் அந்த உலகக்கோப்பையில் மிகவும் ஆபத்தானவர்களாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.