நியூசிலாந்து தொடர்: இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, தவான் கேப்டனாக நியமனம்


நியூசிலாந்து தொடர்: இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, தவான் கேப்டனாக நியமனம்
x

கோப்புப்படம் 

நியூசிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, தவான் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் முடிந்த அடுத்த 4 நாட்களில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 18-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் இந்தியஅணி: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மான் கில், இஷன் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், புவேனஷ்வர்குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டி அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஷபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

வங்காளதேச பயணத்தில் ரோகித், கோலி

இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி வங்காளதேசத்துக்கு சென்று மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. ஒரு நாள் போட்டிகள் டிசம்பர் 4, 7, 10-ந்தேதிகளிலும், டெஸ்ட் போட்டிகள் டிச.14-18 மற்றும் டிச.22-26 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியையும் சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வு கமிட்டி நேற்று அறிவித்தது. . முந்தைய தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் வங்காளதேச தொடரில் விளையாட உள்ளனர். முதுகில் ஏற்பட்ட காயத்தால் உலக போட்டியில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இரு தொடரிலும் இடமில்லை. காயத்தால் உலக கோப்பை போட்டியில் இடம் பெறாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வங்காளதேச தொடர் மூலம் அணிக்கு திரும்புகிறார்.

ஒரே நேரத்தில் 4 வகையிலான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும்.

வங்காளதேச தொடருக்கான இந்திய ஒரு நாள் போட்டி அணி: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்.

இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், கே.எஸ்.பரத், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.


Next Story