கனவிலும் நினைக்கவில்லை....ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வானது குறித்து திலக் வர்மா நெகிழ்ச்சி


கனவிலும் நினைக்கவில்லை....ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வானது குறித்து திலக் வர்மா நெகிழ்ச்சி
x

ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதில் ஒரு அரை சதம் உட்பட 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால், இது மிகவும் பெரியது. அடுத்தடுத்த மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு நான் தயாராகிக் கொண்டுள்ளேன்.


Next Story