இரு நாடுகளுக்கிடையிலான டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள்.. நாதன் லயன் புதிய சாதனை


இரு நாடுகளுக்கிடையிலான டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள்.. நாதன் லயன் புதிய சாதனை
x

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், இருநாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி கும்ப்ளே, முரளிதரன் ஆகியோரின் சாதனை முறியடித்தார்.

இந்தூர்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியாவின் சரிவுக்கு காரணமாக இருந்தவர் நாதன் லயன். 35 வயது சுழற்பந்து வீரரான அவர் 23.3 ஓவர்கள் வீசி 64 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் லயன் புதிய வரலாறு படைத்தார்.

உமேஷ் யாதவ் விக்கெட்டை கைப்பற்றியபோது அவர் கும்ப்ளேயை முந்தினார். இருநாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் கும்ப்ளே 111 விக்கெட் எடுத்து (20 போட்டி) முதல் இடத்தில் இருந்தார்.

அவரை முந்தி புதிய சாதனை புரிந்தார். லயன் 25 டெஸ்டில் 113 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். கும்ப்ளே 111 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும் அஸ்வின் 106 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார். மேலும்

இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரரான முரளிதரனையும் லயன் முந்தினார்.


Next Story