டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் - இந்தியா, இங்கிலாந்து சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலியா


டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் - இந்தியா, இங்கிலாந்து சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலியா
x

Image Courtesy: AFP

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் செய்த சாதனை ஒன்றை ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது.

செயிண்ட் லூசியா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடர் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயிண்ட் லூசியாவில் இன்று நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 68 ரன், ஸ்டாய்னிஸ் 59 ரன் எடுத்தனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் செய்த சாதனை ஒன்றை ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது. அதாவது, டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி (இந்தியா, இங்கிலாந்து - தலா 7 வெற்றிகள்) என்ற சாதனையை ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்;

ஆஸ்திரேலியா - 7 வெற்றிகள் * (2022 - 2024)

இங்கிலாந்து - 7 வெற்றிகள் (2010 - 2012)

இந்தியா - 7 வெற்றிகள் ( 2012 - 2014)


Next Story