இந்திய அணியின் சிறந்த கேப்டன் குறித்த கேள்விக்கு முகமது ஷமி அளித்த பதில்


இந்திய அணியின் சிறந்த கேப்டன் குறித்த கேள்விக்கு முகமது ஷமி அளித்த பதில்
x

கோப்புப்படம்

முகமது ஷமி நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசினார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசினார். உலகக்கோப்பை தொடரில் அடைந்த காயம் காரணமாக ஷமி தற்போது லண்டனில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை விட எம்.எஸ். தோனி தான் சிறந்த கேப்டன் என முகமது ஷமி கூறியுள்ளார்.

முகமது ஷமியிடம் நீங்கள் விளையாடிய கேப்டன்களில் யார் சிறந்த கேப்டன் என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்து முகமது ஷமி கூறியதாவது, பாருங்கள், இது கடினமான கேள்வி. இந்த விஷயங்கள் ஒப்பீடுகளுடன் தொடங்குகின்றன.

என்னைப் பொறுத்தவரை சிறந்த கேப்டன் என்றால் அது எம்.எஸ். தோனி தான். ஏனென்றால் அவரைப் போல யாரும் வெற்றி பெறவில்லை. இந்தியாவுக்காக பல கோப்பைகளை அவர் வென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story