ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்...சிறந்த பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்...சிறந்த பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?
x

Image Courtesy: @BCCI

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டார்.

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை தொடங்கி உள்ளது. முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டார்.



Next Story